அலி சப்ரியை சந்தித்த ஜெய்சங்கர்
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் (Ali Sabry) இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) இன்று விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில், ஜெய்சங்கர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், "இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் சுமூகமான உரையாடல் இடம்பெற்றிருந்தது.
கருத்து பரிமாற்றம்
இதன்போது, பொதுவான ஈடுபாடு மற்றும் ஆளுமை விருத்தி ஆகியவற்றிற்கான புதிய வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்களுடன் சுமூகமான உரையாடல் இடம்பெற்றிருந்தது.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 20, 2024
பொதுவான ஈடுபாடு மற்றும் ஆளுமை விருத்தி ஆகியவற்றிற்கான புதிய வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது.
குறிப்பாக BIMSTEC, IORA மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றில் சிறந்த பல்தரப்பு… https://t.co/Eq7KbaaQLg
குறிப்பாக, BIMSTEC, IORA மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றில் சிறந்த பல்தரப்பு ஒத்துழைப்புக்கான நோக்குகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
