பலத்த காற்று குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கையின்படி, குறித்த கடலோரப் பகுதிகளில், மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், கடல் அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படும்.
வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்பு
இதற்கிடையில், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

அதன்படி, கடற்படை மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri