நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை - பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும், மேற்கூறிய பகுதிகளில் சில இடங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.
பலத்த காற்று வீசும் சாத்தியம்
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri