வெசாக் தானசாலை ஏற்பாட்டாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - வெளியான சுற்றறிக்கை
வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்படும் தானசாலைகளில் மக்களை வழிநடத்த இனிமேல் பௌத்தக் கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக மஞ்சள் கொடிகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் பௌத்த விவகார ஆணையாளர் (அபிவிருத்தி) அசெல மதுசங்க தெரிவித்துள்ளார்.
வெசாக் பௌர்ணமி பண்டிகை குறித்து இன்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை
மேலும், அமைச்சரவையின் ஒப்புதலுடன் இது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களை தானசாலைகளுக்கு வழிநடத்தும்போது பௌத்த கொடிக்கு பதிலாக மஞ்சள் கொடியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டு, நாடு முழுவதற்கும் ஏற்கனவே ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளோம். அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவுகள் மாகாண செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பௌத்த சங்க உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தானசாலைகள் மற்றும் மதக் கடமைகளுடன் தொடர்புடைய முறையற்ற நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சுற்றுநிரூபம், அமைச்சரவை அனுமதியுடன் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri