போதையில் எம்.பி ஒருவர் முன்னாள் ஜனாதிபதிக்கு கூறிய அறிவுரை
யுத்தம் செய்ததை விட பெரும் பாரதூரமான வேலையே இராசாயன பசளையை நிறுத்தியது. இதை கைவிட்டு விடுங்கள். அப்படியில்லை என்றால் அரசும், உங்கள் பதவியும் பறிப்போகும் என நான் தான் முதன் முதலில் சொன்னேன் என சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரத்தில் சிறிதளவு மதுவும் அறிந்தியிருந்த நிலையில் அமைச்சர்கள் 20 பேர் மத்தியிலேயே கோட்டாபயவுக்கு இதனை கூறினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று (02.11.2025) நடைபெற்ற சுதந்திர கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மஹிந்தானந்த கூறிய விடயம்
தொடர்ந்து பேசிய அவர், மஹிந்தானந்த அளுத்கமகே தான் விவசாய அமைச்சராக இருந்தார்.இன்று சிறையில் இருக்கிறார்.நான் கதைத்த பின்னர், கோட்டாபய 'இராசாயன பசளை நிறுத்தம் நல்ல வளர்ச்சியை காட்டியுள்ளது தானே' என மஹிந்தானந்தவிடம் கேட்ட போது அவர் 'நன்றாக இருக்கிறது என்றார்' 'அப்போது நான், பார்த்துக் கொண்டிருங்கள் என்ன நடக்கப் போகிறது என்றேன்'. ஒரு வருடம் போகவில்லை. எல்லாம் முடிந்தது.
பெரும் எதிர்ப்பாப்புடன் 65 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். ஆனால் நாங்கள் அரசை வீழ்த்தவில்லை. அவர்களே தங்களுக்கான குழியை வெட்டிக் கொண்டனர்.
அதேபோல இந்த அரசாங்கமும் விவசாயிகளை வீழ்த்துகிறது.வெங்காயம் மற்றும் கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அவர்களை பாதுகாப்பதில் தவறிழைத்துள்ளது என்றார்.