அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
அமைச்சர்கள் இல்லாவிட்டாலும் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று (12ம் திகதி)இடம்பெற்ற அமைச்சரவை மற்றும் அரச அமைச்சுக்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடுகையில், எரிவாயு, எரிபொருள், மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கும் வகையில் அரச சேவையை எவ்வித இடையூறும் இன்றி பேணுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலையிலும் அரச சேவையை பேணுவதற்கு அனைத்து செயலாளர்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, செயலாளர்கள் தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
