ஜனாதிபதிக்கு பிரபல பெண் ஜோதிடர் வழங்கியுள்ள ஆலோசனை?
மாகாணசபை தேர்தலை தற்போதைக்கு நடாத்த வேண்டாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரபல பெண் ஜோதிடர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனுராதபுரத்தில் உள்ள பிரபல பெண் ஜோதிடரான ஞானமேனி என்பவரே ஜனாதிபதிக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல பெண் ஜோதிடரை சந்திக்க சென்ற அமைச்சர்களிடம் , மாகாண சபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்தாமலிருப்பதற்கான ஆலோசனையை ஜனாதிபதிக்கு வழங்குமாறு கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் தற்போதுள்ள சூழலில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது அரசாங்கத்திற்குப் பாதக விளைவை ஏற்படுத்தும் என்பதே இந்த குழுவினரது கருத்தாக உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் முனைப்புக் காட்டிவருகின்ற நிலையில், மறுபக்கம் அதற்கெதிரான எதிர்ப்புகளும் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam