மும்பையில் வீழ்ந்த பாரிய விளம்பர பலகை: 14 பேர் பலி
இந்தியாவின் (India) நிதித் தலைநகரான மும்பையில் (Mumbai) இடியுடன் கூடிய மழையினால் பாரிய விளம்பர பலகை கோபுரம் ஒன்று வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
அத்துடன், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விளம்பர பலகையை அமைத்த விளம்பர நிறுவனம், அதனை காட்சிப்படுத்துவதற்கு மும்பை நகராட்சி அமைப்பிடம் அனுமதிப்பெற்றிருக்கவில்லை என்று மாநகராட்சி தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
விளம்பரப்பலகையின் அளவு
சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்த விளம்பரப்பலகை, 1,338 சதுர மீட்டர் (14,400 சதுர அடி) அளவைக் கொண்டிருந்தது.
இது ஒலிம்பிக் குளத்தின் 1,250 சதுர மீட்டரை விட பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாநகர சபையினால் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட விளம்பர பலகையின் அளவை விட ஒன்பது மடங்கு அதிகமாக இது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
