இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை ஆரம்பம் : மட்டக்களப்பு மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
டிட்வா புயலினால் ஏற்பட்ட பேரிடர் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கல்வி பொதுத் தர உயர்தர பரீட்சைகளில் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் இன்று(12.01.2026) மீளவும் ஆரம்பமாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று பரீட்சைகள் இடம்பெற்றுள்ளன.
வேண்டுகோள்
அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய, மழையினால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளுக்கு தேவையான முன்னாயத்த நடவடிக்கைகள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால், பரீட்சார்த்திகளை நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகம் தருமாறு வலயக்கல்வி அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.







ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri