உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று(10) ஆரம்பமாகின்றது.
அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறும். நாடு முழுவதும் 2 ஆயிரத்து 362 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை இடம்பெறும்.
உயர்தரப் பரீட்சை
இந்த ஆண்டு பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ள 3 இலட்சத்து 45 ஆயிரத்து 525 பரீட்சார்த்திகளில் 2 இலட்சத்து 46 ஆயிரத்து 521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94 ஆயிரத்து 4 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவர்.

இந்தப் பரீட்சையைச் சுமுகமாக நடத்துவதற்கு வசதியாக நாடு முழுவதும் 325 பரீட்சை ஒருங்கிணைப்பு மையங்களும், 32 வினாத்தாள் சேகரிப்பு மையங்களும் நிறுவப்பட்டுள்ளன பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பரீட்சைக் காலத்தில் பாதகமான காலநிலை அல்லது இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுக்க, அனர்த்த முகாமைத்துவ நிலையம், பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து ஒரு விசேட கூட்டுத் திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளது.
எதிர்பாராத காலநிலை காரணமாக ஏற்படும் பேரிடர் சூழ்நிலைகளால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri