வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இருந்து பல்கலைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்
இம்முறை வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியிலிருந்து 45இற்கும் அதிகமான மாணவர்கள் இலங்கையில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் பதில் அதிபர் மதனி தில்லைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் பாடசாலையில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலிகாம வலயத்தில் அதிக மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் பாடசாலையாக நமது பாடசாலை காணப்படுகிறது.
அந்தவகையில் இம்முறை வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் வணிகம் மற்றும் கலை பிரிவுகளில் இரண்டு மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.
இவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.