ஹர்ச இலுக்பிட்டியவின் பிணை மனு ஒத்திவைப்பு! தொடர்ந்தும் விளக்கமறியல்
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவின் (Harsha Ilukpitiya) பிணை விண்ணப்பத்தை காலவரையின்றி ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, தற்போதைக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சியில் இ-விசா வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற அமைச்சரவை எடுத்த முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் கூறி ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விசாரணை
இந்தநிலையில் ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் முன்வைக்கப்பட்டிருந்த பிணை மனு தொடர்பில் இன்று முடிவை அறிவிப்பதாக முன்னதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நேற்றையதினம் (29) குறித்த பிணை மனு மீதான விசாரணை, பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனு ஒத்திவைப்பு
எனினும் ஹர்ஷ இலுக்பிட்டியவின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், குறித்த பிணைமனுவை காலவரையறையின்றி ஒத்தி வைப்பதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.

அதே நேரம், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை மே 8 ஆம் திகதி நடத்த நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri