யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது இந்த மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி தற்போது விடுப்பில் உள்ளதால், வழக்கை மீண்டும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் சட்டவிரோதமாக சொத்துக்களை சம்பாதித்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.