தன்னை தானே படம் எடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1: உலக செய்திகள்
கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் தன்னை தானே படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளளது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன் எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா எல்1 விண்கலம் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தனது பயணத்தை வெற்றிகரமாக செய்துக்கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 தனது சுற்றுவட்ட பாதையை அதிகரித்துள்ளதாக நேற்று முன்தினம் இஸ்ரோ அறிவித்திருந்தது இதையடுத்து இன்று ஆதித்யா எல் 1 விண்கலம் தன்னை தானே படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு