மன்னாரில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு விழா
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மன்னார் மாவட்ட மட்டத்திலான ஆடிப்பிறப்பு விழா நிகழ்வுகள் நேற்றையதினம் வியாழக்கிழமை (17) மன்னார் திருக்கேதீஸ்வரம் கௌரியம்பாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் சமூக மயப்பட்ட நிகழ்வுகளாக நடாத்தப்பட வேண்டும் என்ற சிந்தனைக்கு அமைவாக மன்/கௌரியம்பாள் தமிழ் மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து இம்முறை ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மன்னார் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் பு.டிலிசன் பயஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
கலை நிகழ்ச்சிகள்
ஆடிப்பிறப்பு விழாவின் தந்தை எனச் சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் உருவப்படத்திற்கு மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து உருவப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர். நிகழ்வில் மன்/கௌரியம்பாள் தமிழ் மகா வித்தியாலய அதிபர் த.கோகுல ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிப்பிறப்பு பற்றிய பாடலுக்கு மாணவர்கள் தயாரித்து வழங்கும் வரவேற்பு நடனம், குழுப்பாடல் மற்றும் பேச்சு என்பனவும் இடம்பெற்றன.
ஆடிப்பிறப்பு பற்றிய சிறப்பு சொற்பொழிவினை பாடசாலை ஆசிரியை செல்வி மு.கனகதுர்க்கா நிகழ்த்தினார். மன்னார் மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
