அம்பாறை மாவட்டத்திற்கான மேலதிக அரசாங்க அதிபர் நியமனம்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந்நியமனத்தை வழங்கியுள்ளது.
முன்பு மேலதிக அரசாங்க அதிபராக இருந்த வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) பதவி உயர்வு பெற்று செல்கின்ற காரணத்தினால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாக சேவை
2007இல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட காரைதீவைச் சிவ.ஜெகராஜன் காரைதீவு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி வந்தவேளையிலே கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளாரகவும் கடமையாற்றி இருந்தார்.
2013இல் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு அங்கு சிறப்பான பணியாற்றியுள்ளதோடு 2019ஆம் ஆண்டு மீண்டும் காரைதீவுக்கு நியமிக்கப்பட்டார்.
ஐந்து வருட கால சேவையை பூர்த்தி செய்து தற்பொழுது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சு
இந்நிலையில், இவரது இடத்திற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சஜிந்ரன் இராகுலநாயகி பதில் பிரதேச நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக வி. ஜெகதீசன் பதவியேற்றார்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பதவியுயர்வு பெற்று போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
