கொழும்பை வந்தடைந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசடோ கந்தா இன்று காலை (23) உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்தடைந்துள்ளார்.
நாடு நெருக்கடிக்கு பதிலளிக்கும் நிலையிலிருந்து மீட்சி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரும் ஒரு இக்கட்டான தருணத்தில் தாம் கொழும்புக்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மாற்றத்திற்கு
வளர்ச்சியின் அடுத்தகட்டத்திற்கான முன்னுரிமைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக, அரசுப் பிரதிநிதிகள், தனியார் துறை மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் கலந்துரையாடுவதற்கு இந்தப் பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
I have arrived in Colombo at a critical moment as Sri Lanka transitions from crisis response toward recovery and sustainable growth. I was warmly received at the airport by Sri Lanka’s Minister of Labor and Deputy Minister of Finance, Anil Jayantha Fernando.
— Masato Kanda (@ADBPresident) March 23, 2026
This visit is an… pic.twitter.com/xIta7lTqqx
உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகளை வலுப்படுத்துவதன் மூலமும், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியைச் சாத்தியமாக்குவதற்கான முதலீடுகளைத் திரட்டுவதன் மூலமும், இலங்கையின் மாற்றத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக மசடோ கந்தா கூறியுள்ளார்.