இலங்கைக்கான புதிய பணிப்பாளரை நியமித்த ஆசிய அபிவிருத்தி வங்கி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய பணிப்பாளராக தகஃபுமி கடோனோ(Takafumi Kadono) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக கடந்த 30 ஜூன் 2023ஆம் திகதி வரை சென் சென்(Chen Chen) செயற்பட்டு வந்தார்.
அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளராக கடோனோ தற்போது பதவியேற்றுள்ளார்.
ஜப்பானிய நாட்டவரான, கடோனோ, கிழக்கு ஆசிய பிராந்தியத் துறையில் இளம் நிபுணராக 2006 இல் ஆசிய அபிவிருத்தி வங்கியில் இணைந்துள்ளார்.
அதன் பின்னர் மத்திய, மேற்கு ஆசிய திணைக்களம் மற்றும் தென்கிழக்கு ஆசிய திணைக்களத்தில் எரிசக்தி நிபுணராக முதன்மையான பதவிகளை வகித்துள்ளார்.
தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி
இந்த நியமனம் தொடர்பில் கருத்து தெரிவித்த கடோனோ,
“ADB இன் இலங்கை வதிவிடப் பணியகத்தின் நாட்டுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டது ஒரு கௌரவமும் பாக்கியமும் ஆகும்.
தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது ADB இலங்கை மக்களின் நம்பகமான பங்காளியாக இருந்துள்ளது.
மேலும் நெருக்கடியில் இருந்து மீண்டு, முன்பை விட வலுவாகவும், ஒற்றுமையாகவும் முன்னேறுவதற்கான பயணத்தை இலங்கை மேற்கொள்ளும்போது, எங்களது ஒத்துழைப்பை மேம்படுத்த நான் உத்தேசித்துள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |