ஆதர்ஷனி கரதன பிணையில் விடுதலை
பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்ட ஆதர்ஷனி கரதன இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசு மாரசிங்கவின் முறைப்பாட்டுக்கு அமைய கைது
ஆதர்ஷனி கரதன நேற்று பொலிஸ் கணனி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகருமான ஆசு மாரசிங்க செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் காட்சிகள் அடங்கிய காணொளிகளை இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்ய போவதாக மிரட்டி தன்னிடம் 100 மில்லியன் ரூபா பணத்தை கேட்டதாக குற்றம் சுமத்தி ஆசு மாரசிங்க இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
