காற்றாலை மின் திட்டத்தின் விலைமாற்றம் என்பது வெரும் வதந்திகளே! மறுக்கும் அதானி தரப்பு
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை அதானி நிறுவனம் முற்றாக நிராகரித்துள்ளது
இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம்,
“தமது நிறுவனம் மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் வரை விலையை மாற்றியமைக்க ஒப்புக்கொண்டதாகக் கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது.
இலங்கை அதிகாரிகள்
இந்த ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாங்கள் முழுமையாகக் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் அதானி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் திட்ட அளவுருக்களில் எந்த மாற்றங்களும் இல்லை என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி குழுமம் மரியாதையுடன் விலகியுள்ளது.
மேலும் இலங்கை அரசாங்கம் எப்போதாவது மறுபரிசீலனை செய்தால் எந்தவொரு வளர்ச்சி வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதினை மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri