மன்னார் காற்றாலை திட்டம் குறித்து அதானியின் நிலைப்பாடு
மன்னாரில் 484 மெகோவாட் காற்றாலை மற்றும் மின்சார பரிமாற்றத் திட்டத்தின் ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட கட்டண விகிதம் மற்றும் பிற அளவுருக்களில் சமரசம் செய்ய இந்தியாவின் அதானி குழுமம் தயாராக இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, உரிய நடைமுறை பின்பற்றப்பட்டு, காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டங்களை செயல்படுத்த அதானி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
முதலீட்டு மேலாண்மைக் குழு
இலங்கை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட முதலீட்டு மேலாண்மைக் குழு, அந்த நேரத்தில் 'முதலீடுகளை விரைவாகக் கண்காணித்தல்' என்ற கீழ் இந்த திட்டத்திற்கு ஒப்புதலையும் அளித்தது.
அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர், ஐந்து அரசு நிறுவனங்களுக்கும் அதானி கிரீன் எனர்ஜி எஸ்எல் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
இந்த நிலையில், மூலதனச் செலவு, நிதி திரட்டும் செலவு, மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் காலம் மற்றும் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற பல காரணிகளை அடிப்படையாக கொண்டு, கட்டணங்களும் தீர்மானிக்கப்பட்டன.
எனினும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட, கிலோவோட்ஸுக்கு 8.26 அமெரிக்க சென்ட் என்ற விலை மிக அதிகமாக இருப்பதாகக் கூறியதை அடுத்து, தற்போதைய தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
