இலங்கையர்கள் பலர் இந்தியாவில் கைது: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை வரலக்ஷ்மி
நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கம் என்பவர் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
குறித்த குற்றச்செயல் தொடர்பில் இலங்கையை சேர்ந்த 6 பேர் முதலில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியான குணசேகரன் என்பவரும் வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கமும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
வரலட்சுமி விளக்கம்
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை ஆதிலிங்கம் திரைதுறையில் முதலீடு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் ஆதிலிங்கம் குறித்து விசாரிக்க நடிகை வரலட்சுமி விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நடிகை வரலட்சுமி இந்த செய்தி தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
'சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்க நினைக்கிறேன். ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் எனக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை'' என தெரிவித்துள்ளார்.
#Fakenews pic.twitter.com/g13x9vFaQZ
— ????????? ??????????? (@varusarath5) August 29, 2023
மேலும் குறித்த வழக்கில் இது வரையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri