ஐ.மக்கள் சக்தியின் கீழ் தேர்தலில் போட்டியிடும் நடிகை தமிதா அபேரத்ன
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை ஐக்கிய மக்கள் சக்தி தற்போது ஆரம்பித்துள்ளது.
தேர்தல் தயார்ப்படுத்தலுக்கான பேச்சுவார்த்தை
இதன் ஆரம்ப கட்டமாக மகரகமை நகர சபை பிரிவின் அமைப்பாளர்களுடனான பேச்சுவார்த்தை ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நடிகை தமிதா
மேலும் இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அன்றைய அரசாங்கத்திற்கு எதிராக நடந்த காலிமுகத்திடல் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரான பிரபல நடிகை தமிதா அபேரத்னவும் கலந்துக்கொண்டிருந்தார்.
தமிதா அபேரத்ன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன



