நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெப் தூதராக நியமனம்
முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், யுனிசெப்பின் (UNICEF) குழந்தைகள் நலத்திற்கான தேசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிக்க உள்ளதாக யுனிசெப் அறிவித்துள்ளது.
இவர் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நல நிதியமான UNICEF உடைய இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,

எதிர்க்கால நம்பிக்கை
``குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்க்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை. UNICEF இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் UNICEF, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகின்றது.
இதற்கு முன்னரும் UNICEF இந்தியாவின் தூதர்களாக பல திரைப் பிரபலங்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam