கொழும்பில் ஏமாற்றப்பட்டுள்ளதாக இந்திய நடிகை முறைப்பாடு
கொழும்பில் கெசினோ வர்த்தகத்தில் முதலீடு செய்ததன் ஊடாக தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக இந்திய நடிகை ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தமது சிறந்த நண்பரான ராகுல் டொன்ஸ் மற்றும் இருவரால் தாம் ஏமாற்றப்பட்டதாக கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பிலும் ,கோவாவிலும் கெசினோ வர்த்தகத்தில் முதலீடு செய்த நிலையில் அதில் இருந்த வருமானத்தில் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே,சஞ்சனாவும் டொன்ஸூம் கடந்த செப்டம்பரில் போதைப்பொருள் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், டொன்ஸ், கெசினோ மற்றும் சட்டவிரோத வர்த்தகங்களில் முதலீடுகளை செய்ய தூண்டியதாகவும், வருமான ரீதியில் தம்மை ஏமாற்றியதாகவும் தம்மைப் பற்றி அவதூறான செய்திகளை பரப்பியதாகவும் சஞ்சனா முறையிட்டுள்ளார்.
தாம் முதலீடு செய்த பணம் கஸ்டப்பட்டு உழைத்த பணமாகும். எனவே தான் தாம் சட்ட நடவடிக்கைக்கு செல்ல துணிந்ததாக சஞ்சனா குறிப்பிட்டுள்ளார்.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri