பயன் தரு மரங்களை வெட்டும் பொறுப்பற்ற செயல்: அதிருப்திப்படும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்
முல்லைத்தீவு குமுழமுனையில் பயன்தரு மரங்களை காரணமின்றி வெட்டி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பெண்கள் சிககூ சங்கத்தின் மீது சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அதிருப்தியினை வெளியிடுகின்றனர் .
குமுழமுனையின் பெண்கள் சிககூ சங்கத்தின் கட்டத்தின் வேலியில் இருந்த இரு இளம் வேப்பமரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
பராமரிப்பு இல்லாத இடம்
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
“இந்த செயற்பாட்டினை தவிர்த்திருக்கலாம்.வேப்பமரங்களை வெட்டிய கற்றும் எந்த தேவையும் இந்த இடத்தில் இப்போது இல்லை. அப்படி இருந்தும் மரத்தை வெட்டி சாய்த்து விட்டு சீமெந்து தூண்களை நட்டு வேலியை அடைந்திருக்கிறார்கள்.
இரண்டு வேப்ப மரங்கள் இருப்பதில் என்ன ஒழுங்கீனம் ஏற்படப்போகின்றது.
நீண்ட நாட்களாக சீரான பராமரிப்பு இல்லாத இடமாக இது இருந்திருந்தது. இப்போதும் கூட வினைத்திறனான செயற்பாட்டை வெளிப்பாடுத்தாத இடமாகவே இதனை நோக்கும் படி தோற்றமளிக்கிறது.
இவ்வாறான நிலையில் இன்னும் சிறிது காலம் வேப்பமரங்களை வெட்டாமல் இருந்திருந்தால் அவற்றை மர தேவைக்கு பயன்படுத்தியிருக்க முடியும்.
வீடுகளில் கதவுகளை செய்வதற்கும் ஆலயங்களில் கட்டவேலைகளின் போதும் வேப்ப மரத்தண்டுகள் வெட்டு மரங்களாக பயன்படுத்தப்படுகிறது.
பொறுப்பற்ற செயற்பாடு
சிககூ சங்கத்தின் நிர்வாகிகள் இது தொடர்பில் பொறுப்பற்று இருந்தது கவலைக்குரிய விடயமாகும்.
பயனுடைய வெட்டுமரங்களை உரிய காலம் வரை வளர்ப்பதற்கு முயன்றிருக்க வேண்டும். பயன்படுத்துவதற்கேற்ற பருமனுக்கு வளர்ந்த பின்னர் அதனை வெட்டி பயனடைந்து இருக்கலாம்” என தெரிவித்துள்ளனர்.