தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு நீதி கோரிய மனித உரிமை செயற்பாட்டளர் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் (Sri Lanka) முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிக்கு நீதி வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டளர் சிறீன் சரூர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) நேற்றைய தினம் (11.05.2024) இடம்பெற்ற நீதிக்கான நடை பயணத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதெ அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இன்று காசாவில் என்ன நடக்கின்றதோ அவ்வாறே 2009ஆம் ஆண்டு இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.
அப்போது பாரியளவில் மக்கள் அழிந்தபோதும் யுத்த குற்றங்கள் இடம்பெற்ற போதும் ஒரு போதும் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. காசாவிலும் இது தான் நடக்கின்றது என அவர் கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |