தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வகையில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மருதபாண்டி ராமேஸ்வரன்
மஸ்கெலியா - பிளாண்டேசனானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வகையில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாற்று நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலை எமக்கு ஏற்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா அம்பாள்ஸ் மண்டபத்தில் நேற்று (18.09.2022) நடந்த கலந்துரையாடலில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனியே மிக மோசமான நிறுவனமாக உள்ளது.

தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்தல்
நஷ்டம் என கொக்கரிக்கும் சில கம்பனிகள், நஷ்டம் என்றால் எதற்கு தொடர்ந்தும் இயங்க வேண்டும், தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.
இதன்போது நிர்வாகங்கள் இலாபம் உழைக்கின்றன. ஏமாற்று வித்தையாகவே நஷ்டம் என்ற கதைக் கூறப்படுகின்றது.
மலையக தோட்ட தொழிலாளர்கள்
ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் எட்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம்.

8 மணி நேரத்தில் 2 கிலோ தான் கொழுந்து பறித்தால் என்ன
செய்ய முடியும், ஆகவே தொழிலாளர்கள் ஒன்றுமையாக இருக்க வேண்டும்.
மேலும் வன்முறைகள் வேண்டாம். முறையாக போராடுவோம். தொழிற்சங்கங்கள், கொழும்பில் ஒன்று கூடி பேச்சு நடத்தினோம். இது விடயத்தில் இணைந்து செயற்பட தீர்மானிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri