அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை: வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

Jaffna Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Kajinthan Aug 02, 2025 01:59 PM GMT
Report

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது.

அத்துடன், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமாரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வேலணை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக எந்தவிதமான அனுமதியும் பெறப்படாது அதிகளவான குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

சாரதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள eTraffic App.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சாரதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள eTraffic App.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரதேச சபையின் அனுமதி

அத்துடன் அமைக்கப்படும் குழாய்க்கிணறுகளை எந்தவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் போதிய வழிகாட்டுதல்களுமின்றி தான்தோன்றித்தனமாக அமைப்பதானது எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற மிக சொற்பமான நன்னீர்க் கிணறுகளையும் வெகுவிரைவில் பாதிப்படையச் செய்யும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது.

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை: வேலணை பிரதேச சபை அறிவிப்பு! | Action Tube Well Constructed Without Permission

இதனால் குறித்த செயற்பாட்டை விரைந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் குழாய்க்கிணறுகளை அமைக்க உத்தேசித்துள்ளவர்கள் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பித்து அவர்களது சிபாரிசுக்கு அமைவாக பிரதேச சபையின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும்.

அத்துடன் உடனடியாக செயற்படும் வண்ணம் இந்த நடைமுறை இறுக்கமாக பின்பற்றப்படும் என்பதோடு அனுமதியின்றி குழாய்க்கிணறு அமைப்பவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே நேரம் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் தங்களது சேவை வழங்கல் தொடர்பாக பிரதேச சபையில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிமப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீதவான் திலின கமகே அதிரடியாக பணியிடை நீக்கம்

நீதவான் திலின கமகே அதிரடியாக பணியிடை நீக்கம்

சட்ட நடவடிக்கை

 குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுடன் அனுமதிப்பத்திரம் இல்லாதோருக்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தல் தண்டனைக்குரிய குற்றச்செயலாகும்.

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை: வேலணை பிரதேச சபை அறிவிப்பு! | Action Tube Well Constructed Without Permission

குழாய்க்கிணறு அமைப்பதற்கான சேவை வழங்கல் உரிமப்பத்திரமின்றி எமது பிரதேச சபைக்குள் பிரவேசிக்கும் குழாய்க்கிணறு அமைக்கும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் பிரதேச சபையால் பொலிசார் ஊடாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அருகிவரும் தீவகப் பிரதேசத்தின் நன்னீர் வளத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு வேலணைப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலணை பிரதேச சபை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US