ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நாட்டில் வலுவான அரசியல் சக்தியாக மாற்ற நடவடிக்கை - மகிந்த அமரவீர
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அனைத்து கட்சிகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணையும் என அதன் பொதுச் செயலாளரும் சுற்றாடல் அமைச்சருமான மகிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், வகிக்காத அனைத்து கட்சிகள், அரசியல் அமைப்புகளை இணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வலுவான அரசியல் சக்தியாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை நியமிப்பதற்காகக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மகிந்த அமரவீர இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நாட்டில் வலுவான அரசியல் சக்தியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்காலத்தில் மேலும் பல சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri