இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம்! பிரதியமைச்சர் வழங்கியுள்ள உறுதி
பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வெகுஜன ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன உறுதியளித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது யாழ். அஞ்சல் வளாகத்தில் வடமாகாண அஞ்சல் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார்.
அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள்
இதனையடுத்து யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்தினை பார்வையிட்டதுடன் வடமாண பிரதி அஞ்சல்மா அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதுடன், வடமாகாண அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை அஞ்சலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில், இதற்கு பிரதியமைச்சர் பதிலளித்துள்ளார்.
பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விடுவிக்க நடவடிக்கை
இது தொடர்பில் நாம் கரிசனை கொண்டுள்ளோம். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து அதன் பின்பு எமது அரசாங்க உயர்மட்ட அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

1971ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் செயற்படாமல் போன நிலையில், இன்று வரை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
இதேவேளை நேற்றைய கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர், பிராந்திய கணக்காளர், வவுனியா அஞ்சல் அத்தியட்சகர் யாழ் தபால்நிலைய பிரதம தபாலதிபர், பருத்தித்துறை அஞ்சலதிபர் மற்றும் அஞ்சல் பயிற்சிக்கல்லூரியின் பிரதம போதனாசிரியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri