புதுமுறிப்பு குளத்தை சீர் செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் (Photos)
கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் ஏற்பட்ட பாதிப்பினை சீர் செய்யும்
நடவடிக்கைகள் இராணுவத்தினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நடவடிக்கையானது இன்று(16.12.2023) நீர்பாசன திணைக்களத்தினர், பொறியியலாளர்களின் கண்காணிப்பில் ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
புதுமுறிப்பு குளத்தில் தொடர் மழை காரணமாக அணைக்கட்டில் மண்ணரிப்பால் ஏற்பட்ட ஆபத்து நேற்று(15) பொறியியலாளர்களால் அடையாளம் காணப்பட்டது.
இலங்கை மக்களை நசுக்கும் வற் வரி : ஆடம்பர கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள்
போக்குவரத்து இடைநிறுத்தம்
இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட அறிவித்தலுக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், குளக்கட்டின் ஊடான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் விவசாயிகளும், 11 வது கஜபாகு பிரிவின் 40 இராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |