வவுனியாவில் பைசர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை
வவுனியா 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கோவிட் தடுப்பூசியாக பைசர் வழங்க சுகாதார பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 5 நிலையங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பைசர் தடுப்பூசி காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த தடுப்பூசியினை கனகராஜன்குளம் வைத்தியசாலையில் 08ம் திகதியும், புளியங்குளம் வைத்தியசாலையில் 09ம் திகதியும், நைனாமடு பொதுநோக்கு மண்டபத்தில் 10ம் திகதியும், நெடுங்கேணி வைத்தியசாலையில் 13ம் திகதியும், காட்டுகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் 14ம் திகதியும் பெற்றுக்கொள்ள முடியும்.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதங்கள் கடந்திருப்பின் தமது தடுப்பூசி அட்டையுடன் சென்று மூன்றாவதாக பைசர் தடுப்பூசியை பெற்று கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.






அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
