புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி நாளை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்படும் நிலையங்களுக்குச் சென்று 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமக்கான இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்ட சிறீசுப்பிரமணிய வித்தியாலயம், தேவிபுரம் வைத்தியசாலை, மூங்கிலாறு வைத்தியசாலை, பாரதிபுரம் பாடசாலை ஆகிய நிலையங்களில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (06) காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நான்கு நாட்கள் (6,7,8,9) தொடர் தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாகச் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.





வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
