பாடசாலைகளை இரு வாரங்களில் திறப்பது தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்
200க்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரண்டு வாரங்களில் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்போது,நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை முதலில் திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா?- முழு சொத்து மதிப்பு இதோ Cineulagam
