கடற்றொழிலார்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடற்றொழிலார்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்க அதிபர் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று (18) வல்வெட்டித்துறை அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் கவனயின்மை
"எமது மக்களுக்கும் மண்ணெண்ணெய் விநியோகித்து இன்றுடன் 47 நாட்கள் ஆகியுள்ளது. இதனால் கடற்றொழிலார்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்றுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் பார்வையாளர்களாக உள்ளார்களே தவிர மக்கள் பிரச்சினைகளை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை.
கருப்பு சந்தையின் தாக்கம்
இதனால் கருப்பு சந்தை உருவாகி, மக்கள் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயை1500 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சரிடம் நாங்கள் பேச்சுவரத்தை மேற்கொண்டோம். எனினும் 20 ஆம் திகதிக்கு பின்னரே இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒரு வாரத்திற்கு 20 லீற்றர் என்னை கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கும்! பிரதமர் ரணில் அறிவிப்பு |