70 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூட நடவடிக்கை: எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் சங்கம்
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு 70 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யு.எஸ்.பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
70 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூட நடவடிக்கை - எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் சங்கம் |
போதுமானளவு எரிபொருள் கிடைக்கவில்லை
30 நாட்களுக்கு முன்னர் முற்பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் , இதுவரையிலும் போதுமானளவு எரிபொருள் கிடைக்கப் பெறவில்லை.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப் பெறாமையின் காரணமாக நாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்.
அமைச்சரின் கூற்றுக்கிணங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே எரிபொருள் கிடைக்கும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுதொகை எரிபொருளே விநியோகிக்கப்பட்டுள்ளதால், 20 வீதமானோருக்கேனும் எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் சங்கம் விடுக்கும் கோரிக்கை
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பிற்காக பொலிஸாரை மாத்திரம் கடமைகளில் ஈடுபடுத்துவது போதுமானதல்ல.
எனவே இராணுவத்தினரையும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மோதல்கள் இடம்பெறுவதால், 24 மணித்தியாலங்களும் பாதுகாப்பு போடப்படுவது அவசியம் எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் வலியுறுத்தினார்.
எரிபொருள் நெருக்கடி: பயண முறைகளை மாற்றும் இலங்கையர்கள் |
பெட்ரோல் இல்லை! வரிசையில் காத்திருப்பதால் பயனில்லை : வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது |