10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த கோடீஸ்வர வர்த்தகரை நாடவுள்ளாரா மைத்திரி..!
10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த பணத்தை திரட்டுவதற்கு தான் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த வேண்டியுள்ளது.
மக்களிடம் பணம் வசூலிக்க திட்டம்

இவ்வளவு பாரிய தொகையை நட்டஈடாக செலுத்தும் திறன் என்னிடம் இல்லாததால், மக்களிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளேன்.
இவ்வளவு தொகையை செலுத்துவதற்கு என்னிடம் பண பலம் இல்லாததால் மக்களிடம் இருந்து 10 கோடி ரூபாவை வசூலிப்பேன் என நம்புகின்றேன். என்னிடம் சொந்தமாக மோட்டார்சைக்கிள் கூட இல்லை.
நிதியத்தை நிறுவுவதற்காக குழுவொன்றை அமைப்பேன். நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.
டட்லி சிறிசேனவை நாடுவாரா..!

அத்துடன், கோடீஸ்வர வர்த்தகர் டட்லி சிறிசேனவும் நானும் சகோதரர்கள் என்றாலும் டட்லி சிறிசேனவின் வர்த்தகத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை. எங்கள் குடும்பத்தில் நாங்கள் 11 பேர் இருக்கிறோம்.
அப்பாவுக்கு ஐந்து ஏக்கர் நெல் வயல், மூன்று ஏக்கர் நிலம் இருந்தது.
அந்த ஐந்து ஏக்கர் நிலம் எனது சகோதரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மூன்று ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன். எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமான வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri