கனடாவுக்கு புதிதாக வந்துள்ளோர் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதை விரைவாக்கும் திட்டம்! வெளியாகியுள்ள தகவல்
தற்காலிக வாழிட உரிமத்துடன் கனடாவுக்கு புதிதாக வந்துள்ளோர் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதை விரைவாக்கும் வகையிலான ஒரு திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் Sean Fraser தெரிவித்துள்ளார்.
நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கான சிறந்த வழிமுறை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்காலிக வாழிட உரிமம் கொண்டோர் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கான சிறந்த வழிமுறையை உருவாக்குவதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கனடா அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதற்கு முன், ’temporary resident to permanent resident pathway’ அல்லது TR to PR என்னும் ஒரு திட்டம் நடைமுறையில் இருந்தது.
அதன் மூலம் 90,000 அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் விரைவாக நிரந்தர வாழிட உரிமம் பெற முடிந்தது.
புதிய திட்டம்
புதிதாக உருவாக்கப்படும் திட்டம், பழைய திட்டத்தைப்போல இருக்காது. அதை நிறைவேற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அது சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமன்றி, தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் பயனளிக்கத்தக்கதாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 14 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
