இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள்
வெளிநாட்டு பிரஜாவுரிமைகளை கொண்ட இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட வீசாவையும், இலங்கைக்கு முதலீடுகளை கொண்டுவரும் வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால வதிவிட வீசாவையும் வழங்கும் வகையில், இலங்கையில் குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்கு தேவையான வகையில் குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் அடிக்கடி திருத்தத்தை மேற்கொண்டு, நாட்டின் பொருளாதாரத்திற்கு அதில் பங்களிப்பை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதன்படி வீசா வகைகள் மற்றும் அறவிடப்படும் கட்டணங்களை திருத்துவதற்கும் 2018.01.09 ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் நிபுணர்கள் குழுவை அமைத்தம் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய வீசா கால எல்லையை நீடித்தல் ஊடாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவித்தல் அடிப்படை நோக்கமாகும்.
அத்துடன் முதலீடுகளின் பெறுமதியையும் நீண்ட கால பிரதிபலன்களையும் பெற்றுக்கொள்ளவும் முடியுமாக இருக்கும். மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கற்றல் காலத்தை அடிப்படையாகக் கொண்ட வீசாக்களை வழங்க முடியும்.
அத்துடன் இலங்கை பிரஜையை திருமணம் முடித்துள்ள வெளிநாட்டவருக்கு 5 வருட காலத்திற்கான வீசாவை வழங்கவும். அத்துடன் அவரின் 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கும் அதே வீசாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை பிரஜைகள் சட்டத்திற்கமைய இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியாத தற்போது வெளிநாட்டு குடியுரிமையை கொண்டுள்ள இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட வீசாவை வழங்குவதன் மூலம் இலங்கை பிரஜைகளின் பொருளாதார பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோன்று நீண்ட கால வீசாவை வழங்கும் போது ஒவ்வொரு முதலீட்டாளர்களும் கொண்டு வரும் முதலீட்டு தொகை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
3 இலட்சம் அமெரிக்க டொலர் கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு 5 வருட வீசாவும், 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் போது 10 வருட வீசாவையும் வழங்க நடவடிக்கையெடுக்கப்படும்.
இது தொடர்பான முறைமை மற்றைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும். இதேவேளை நீண்ட கால வீசாவானது பாதுகாப்பானது என்பதுடன், அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri