ஊரடங்கு நேரத்தில் திறந்திருந்த வர்த்தக நிலையங்கள்! சுகாதாரப் பிரிவினர் எடுத்த நடவடிக்கை
வவுனியாவில் ஊரடங்கு சட்ட நேரத்தில் திறந்திருந்த 4 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் முழுமையான முடக்கம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் கடைகளைத் திறந்து மரக்கறி மற்றும் பலசரக்கு வியாபாரத்தில் ஈடுபட்ட 4 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிசாரால் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டது.




விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam