மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றம் : ஏர் இந்தியா எடுத்துள்ள திடீர் முடிவு
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின்(Israel) டெல் அவிவ் நகரத்திற்கு செல்லக்கூடிய அனைத்து விமான போக்குவரத்தையும் இடைநிறுத்துவதாக ஏர் இந்தியா(Air India) விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கின் நிலவரங்களை மிக நெருக்கமாக கவனித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் விமான குழுவின் பாதுகாப்பே முதன்மையானது என்று தெரிவித்துள்ளது.
பயணச் சீட்டு முன்பதிவு
அத்துடன் தற்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டெல் அவிவ் நகருக்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து விமான போக்குவரத்தையும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்துவதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
மேலும், டெல் அவிவ் நகருக்கு பயணச் சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கான பணம் திரும்ப வழங்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
