யாழில் வீதியில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை ஊடாக காரைநகர் செல்கின்ற வீதியில் விலங்குக் கழிவுகள், வைத்தியசாலை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் என்பன தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வந்தன.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொட்டப்படுகின்ற கழிவுகளை உண்பதற்கு நாய்கள் அவ்விடத்திற்கு செல்வதனால் வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.
மீள் சுழற்சி நிலையம்
இது குறித்து பல தடவைகள் ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி இருந்தன. இந்நிலையில் குறித்த பகுதியை சிசிரிவி காமராக்கள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிப்பதற்கும், அவ்வாறு கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் மாநகர சபை தயாராகியுள்ளது.
அத்துடன், குறித்த குப்பை போடும் பகுதிக்கு 100 மீட்டர்கள் தொலைவில் உள்ள மீள் சுழற்சி நிலையத்திற்கு குப்பைகளை வழங்க முடியும் என்ற அறிவித்தலையும் மாநகர சபை காட்சிப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
