கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்குவது குறித்து கலந்துரையாடல்
அசௌகரியங்களை தவித்துக்கொண்டு மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை எந்த தடைகளும் இன்றி வழங்குவதற்கு ஏற்ற வகையில் அனைத்து திணைக்களங்களும் செய்யப்பட வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை மக்களுக்கு வழங்கக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் அசௌகரியங்களை தவித்துக்கொண்டு மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை எந்த தடைகளும் இன்றி வழங்குவதற்கு ஏற்ற வகையில் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.
குறிப்பாக எரிபொருள், சமையல் எரிவாயு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கிடைக்கின்ற சந்தர்ப்பத்திலே அதை சரியாக முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளித்து அதை செயல்படுத்த வேண்டும்.
அதாவது பாடசாலை பேருந்து சேவை மற்றும் மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகவும் குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளை கால தாமதமின்றி உரியவாறு வழங்குதல், உத்தியோகத்தர்கள் கடமைகளுக்கு செல்லக்கூடிய வகையில் எரிபொருளை வழங்குதல், சுகாதாரத் திணைக்களத்திற்கான எரி பொருளை உரிய ஒழுங்குகளில் வழங்குமாறும்,மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு எந்த தடைகளும் இன்றி செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரச அதிபர் காணி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
சிறிமோகன், கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள் மற்றும்
திணைக்கள தலைவர்கள், பல நோக்குகூட்டுறவு சங்க முகாமையாளர்கள் மற்றும்
போக்குவரத்து துறையினர் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



