சுதந்திர தினம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்தின் போது இடையூறு விளைவிப்பதை தவிர்ப்பதற்காக நுழைவு தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையவே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டில் 75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (04.02.2023) கொழும்பில் நடத்தப்படவிருந்த போராட்டம் தொடர்பிலேயே நீதிமன்ற இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
நுழைவு தடுப்பு உத்தரவு
இதன்படி, 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாளை (04.02.2023) எந்தப் போராட்டமும் நடத்தப்படக் கூடாது எனவும், காலி முகத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்குள் நுழைவு தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.