இலங்கை மக்களின் அதிரடி செயற்பாடு! அதிர்ச்சியில் உற்பத்தியாளர்கள்
இலங்கையில் அனைத்து தரப்பு மக்களினாலும் உட்கொள்ளும் உணவாக பேக்கரி உற்பத்திகள் உள்ளன.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பேக்கரி உற்பத்திகளை மக்கள் புறக்கணித்து வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
பாணின் விலை 10 ரூபாயில் அதிகரித்துள்ளமை மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரித்துள்ளதனை தொடர்ந்து அதற்கான கோரிக்கை பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோஸ்ட்பாண் மற்றும் பனிஸின் விலை 30 ரூபாயிலும், முட்டை பனிஸ் 60 ரூபாயிலும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரித்துள்ளதனை தொடர்ந்து உற்பத்தி பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாண் விலை அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் காலை வேளையில் மாத்திரம் சுமார் 250 பாண்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 100 க்கும் குறைவான அளவு பாண்களே விற்பனையாகியுள்ளதாக பேக்கரி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையின் அடிப்படையில் ஏனைய பேக்கரி பொருட்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே நிலைமை நீடித்தால் பாண் விற்பனை முழுமையாக இல்லாமல் போய்விடும் என பேக்கரி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
You May Like This Video..

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
