செட்டிகுளத்தில் காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்க விசேட நடவடிக்கை: திலீபன் எம்.பி
செட்டிகுளத்தில் பிரதேச செயலாளரின் துணையுடன் தனி நபர்களால் காடுகள் அழிக்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை காணியற்ற மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதில் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் சோளச் செய்கையாளர்கள் மிகவும் குறைவு. இருந்தாலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து விவசாய அமைச்சருடன் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேச இருக்கின்றோம். அதனடிப்படையில் சோளச் செய்கையாளர்களுக்குரிய அரச சலுகைகள் பெற்றுக்கொடுக்கப்படும்.
மேலும், வவுனியா- செட்டிகுளம் பிரதேச செயலாளர் கடமையேற்ற காலப்பகுதியில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆவணங்கள் இன்றி பல காணிகள் காடுகள் அழிக்கப்பட்டு சில நபர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குக் காணிகள் வழங்குவதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் தனிநபரின் காடழிப்பு மற்றும் நில அபகரிப்புக்கு இடமளிக்க முடியாது.
இந்த விடயம் தொடர்பில் நான் பார்வையிட்டேன். பிரதேச செயலாளரின் 2 ஹெக்டேயர் கடிதத்தை வைத்துக்கொண்டு இரண்டு நபர்கள் 100 ஏக்கருக்கு மேல் காடுகளை அழித்து காணிகளை அபகரித்துள்ளனர்.
இக்காணிகளைக் கையகப்படுத்திக் காணி அற்ற மக்களுக்கு வழங்குமாறு நான் மாவட்ட அரச அதிபருக்கு தெரிவித்திருக்கின்றேன். அவர்கள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள்.
நிச்சயமாக நல்ல முடிவு கிடைக்கும். சீனாவிடம் கடன் வாங்கும் விடயம் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
மக்களுக்குப் பாதிப்பை
ஏற்படுத்தும் எதனையும் அரசாங்கம் செய்யமாட்டாது எனவும் தெரிவிக்கின்றேன்
எனவும் கூறியுள்ளார்.



வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 2 மணி நேரம் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan