வவுனியாவில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை
வவுனியாவில் முககவசங்கள் அணிந்து வீதிகளில் செல்லாமை, உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக வவுனியாவில் பொலிசார் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதிகளில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் என்பனவற்றில் பயணிப்பவர்கள் உரிய முறையில் முககவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு எதிராக இன்றையதினத்திலிருந்து பொலிசார் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கோவிட் வைரஸின் மூன்றாவது அலை பெருக்கெடுக்க தொடங்கியுள்ளதை அடுத்து சுகாதாரத்துறையினர் பொலிசார் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து சுகாதார முறைகளை உரிய முறையில் பின்பற்ற தவறியவர்களை
பொலிசாரபெயர் விபரங்களை எழுதிய எடுத்த பின்னர் எச்சரிக்கையுடன்
விடுவித்துள்ளனர்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri