கோவிட் தொற்று என நாடு திரும்பாத இலங்கையர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
கொவிட் தொற்று என கூறி இலங்கை வராமல் வெளிநாடுகளில் தங்கியுள்ள கல்வியிலாளர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் இலங்கை பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் பணியை விட்டு விலகியதாக கருதப்படுவார்கள் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு இடங்களில் பணி செய்வதாக கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, இது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலைமைக்கமைய இதுவரையில் வெளிநாடுகளில் உள்ள பேராசிரியர்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் பெறுவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்வதற்கான காரணம், பல்கலைக்கழகத்தால் விடுமுறை வழங்கப்பட்ட விதம், புறப்பட்ட காலம், தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணங்களுக்கமைய மாத்திரம் உரிய பேராசிரியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டில் இருக்கும் சில விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கொவிட் தொற்றுநோயை ஒரு காரணமாக பயன்படுத்தி இலங்கைக்கு வர முயற்சிக்கவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri