சில பாடசாலைகளுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
டெங்கு நுளம்புகள் அதிகமாகப் பரவும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளின்பட்டியல் விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
131 பாடசாலைகள்
இதன்படி, சமூக பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த பாடசாலைகளின் பெயர்களையே வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஏற்கனவே குறித்த பாடசாலைகளின் பட்டியலைத் தொகுத்துள்ளது.
புள்ளிவிபரங்களின்படி, ஆய்வு செய்யப்பட்ட பாடசாலைகளில்; 131 பாடசாலைகளில் டெங்கு பரவும் இடங்கள் கண்டறியப்பட்டன.
அதே நேரத்தில் 37 பாடசாலைகளில் டெங்கு உருவாக்கம் பெறும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதற்கிடையில், 718 அரச நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அதில் 214 இடங்கள், நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri